farm house pt desk
சிறப்புக் களம்

காற்றோட்ட வசதியுடன் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான பண்ணை வீடு!

பெரு நகரங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஒரு இயற்கை சார்ந்த இடத்தில் வீடுகட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

Kaleel Rahman

இயற்கை சார்ந்த இடத்தில் வீடு கட்டுவது ஒரு ரகம் என்றால், ஒரு இடத்தை வாங்கி அந்த இடத்தில் வீடுகட்டும் போதே அந்த இடத்தையே இயற்கை சார்ந்த இடமாக மாற்றுவது இன்னொரு ரகம். அப்படி திருநெல்வேலியில் ஆயிரம் சதுரடியில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டின் சிறப்பை பற்றிதான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

Teak wood door

இந்த வீடு பற்றி கட்டட வடிவமைப்பாளர் சொல்வதென்ன?

“பெஸ்ட் தெர்மல் இன்சுலேஷன் (Best Thermal Insulation) வீடாக இது இருக்க வேண்டும் என்பதற்காக ரேட்ரா பாண்ட், பில்லர் ஸ்லாப் (Pillar Slab) பயன்படுத்தி கட்டி இருக்கிறோம். அதேபோல் வீட்டுக்குள் நல்ல காற்றோம் இருக்க வேண்டும் என்பதற்காக பிரிக் ஜாலி (Brick jali) பயன்படுத்தி இருக்கிறோம் இது பண்ணை வீடு என்ற காரணத்தாலும் கரையான் மற்றும் பூச்சிகளோட தொல்லை இருக்கும் என்பதாலும் பாலீ செய்யப்பட்ட தேக்கு மரங்களை (bali teak wood) பயன்படுத்தி இருக்கிறோம்” என்கிறார் கட்டட வடிவமைப்பாளர் பாலாஜி.

செங்கல் வைத்து எழுப்பப்பட்டுள்ள 10 தூண்கள்!

இந்த பண்ணை வீட்டுக்கு நான்கு அடி உயரத்தில் லோ-பேரிங் பவுண்டேஷன் (Low Barring Foundation) போடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் வராண்டா, பா வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வராண்டாவில் இருக்கும் 10 தூண்களுமே செங்கல் வைத்து எழுப்பப்பட்டுள்ளன. வராண்டாவின் ஒரு பகுதிக்கு வியட்நாம் டெரக்கோட்டா டைல்ஸ் தரைத்தளமும், மற்றொரு பகுதிக்கு லேப்பட்ரோ பினிஸ் கிரானைட் (Lapatro Finish Granite) பயன்படுத்திய தரைத்தளமும் போடப்பட்டுள்ளன. வராண்டாவின் சீலிங் மற்றம் பிரேம் அமைக்க தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேல் ரூஃப்பிங் அமைக்க தரை ஓடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Dining table

வின்டேஜ் லுக்-ஐ கொடுக்கும் தேக்கு மரக்கதவு

இந்த வீட்டின் முன்கதவு, தேக்கு மரத்தால் வின்டேஜ் லுக்-ஐ கொடுக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டில் மொத்தமே 3 ஜன்னல்கள்தான் வைத்திருக்கிறார்கள். அதில் சதுரமான ஹாலில் 2 ஜன்னல்களும், பெட்ரூமில் 1 ஜன்னலும் இருக்கின்றன. இரண்டு இடத்தில் சுவரின் உட்புறம் ஏதாவது வைப்பதுபோல் நிஸ் டிசைனில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் உள் கூரைக்கு பில்லர் ஸ்லாப் சீலிங் (Pillar slab ceiling) அமைத்து, ஃபில்லிங் மெட்டீரியலாக ஓடு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஓடுகளில் படியும் தூசியை குறைப்பதற்காக மேற்பூச்சு செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்திற்காக செய்யப்பட்டுள்ள செங்கல் ஜாலி ஒர்க் (brick jali work)

அடுத்ததாக டைனிங் ஹால். இங்குள்ள டைனிங் டேபிளும், நாற்காலிகளும் தேக்கில் செய்யப்பட்டு அழகாக இருக்கிறது. இந்த வீட்டில் மொத்தமே 3 ஜன்னல்கள் மட்டுமே இருந்தது என்பதால், மற்ற இடங்களின் காற்றோட்டத்திற்காக ஜாலி ஒர்க் செய்யப்பட்டுள்ளது. டெரக்கோட்டா ஜாலி (Terracotta Jali) நமக்கு வெளியே அதிகமாக கிடைக்கும். ஆனால், இந்த வீட்டில் செங்கற்களால் ஜாலி ஒர்க் பண்ணியிருக்காங்க. வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்திற்காக மட்டுமே ஜாலி ஒர்க் செய்யப்படுகிறது. இது பண்ணை வீடு என்பதால் அதிகமாக கொசுத் தொல்லை இருக்கும். கொசுவில் இருந்து காத்துக் கொள்ள ஜாலி ஒர்க்குக்கு (Jali work) மேலே கொசு வலை போடப்பட்டுள்ளது.

bricks jolly work

கான்கிரீட் மற்றும் கம்பி செலவை குறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரிக் லிண்டல் பீம் (Brick Lintel Beam)!

செங்கல்லில் 3 வகைகள் உண்டு. அவை

- கைகளால் செய்யப்படும் கன்ட்ரி பிரிக்ஸ் (Country Bricks)

- கன்டரி பிரிக்ஸை வைத்து பெரிய அளவில் செய்யப்படும் சேம்பர் பிரிக்ஸ் (Chamber Bricks).

- மற்றொன்று மெஷினை பயன்படுத்தி செய்யப்படும் வயர்கட் பிரிக்ஸ் (Wirecut Bricks).

இதில் வயர்கட் பிரிக்ஸில் பினிஸிங் நன்றாக இருக்கும். இந்த வீட்டின் சுவரை எழுப்ப வயர்கட் பிரிக்ஸ்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரேட்ராபாண்டு முறையில் செங்கல் சிமெண்ட் பயன்படுத்தி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. செங்கலுக்கு மேலே இரண்டு வாட்டர் ப்ரூப் கோட்டிங் (Water Proof Coating) கொடுக்கப்பட்டுள்ளது. பூசாமல் விடக்கூடிய கட்டடங்களில் இது முக்கியமானது. அதேபோல் கான்கிரீட் மற்றும் கம்பி செலவை குறைப்பதற்காக பிரிக் லிண்டல் பீம் அமைக்கப்பட்டுள்ளது.

Teak wood sealing

ஒரு வீட்டை எதைக் கொண்டு கட்டுகிறோம் என்பது மட்டுமே முக்கியமில்லை. அங்கு பயன்படுத்தப்படும் பொருளும் முக்கியம். அவைதான் அந்த வீட்டை அழகுபடுத்தும். அதேபொல்ல ஒரு வீட்டை எதற்காக கட்டுகிறோம் என்ற புரிதலோடு கட்ட வேண்டும். இந்த வீட்டை சரியான புரிதலோடு ரொம்ப அழகாவே கட்டியிருக்காங்க.!