சிறப்புக் களம்

14 வயதில் 72 ஆப்ஸ் உருவாக்கிய தமிழக விஞ்ஞானி!

14 வயதில் 72 ஆப்ஸ் உருவாக்கிய தமிழக விஞ்ஞானி!

webteam

மொபைலில் விளையாடும் வயதில், எண்ணற்ற ஆப்ஸை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறான் ஒரு மாணவன். இவனது கண்டுபிடிப்புகள் பல வெளிநாட்டு நிறுவ‌னங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த 14 வயதே நிரம்பிய ரிஷிகுமார் என்ற மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளான். இவன் இடும் உத்தரவுகளை அப்படியே பின்பற்றுகிறது இந்த ரோபோ. பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது.

தனியார் பள்ளி ஆசிரியர் அனில்குமார், காவல் உதவி ஆய்வாளர் பொட்டா தம்பதியின் மகனான ரிஷிகுமார் கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி CPUவை உருவாக்கியிருப்பதாகக் கூறினார்.

இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று மாணவன் ரிஷிகுமார் கூறுகிறான். தனக்கு பொருளாதார ரீதியிலான உதவிகள் கிடைத்தால், மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்பதும் மாணவனின் நம்பிக்கையாகும்.

தன்னைப்போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் படைப்புகளை வெளிக்கொண்டுவ ரவேண்டும் என்பது தனது எதிர்கால லட்சியம் என்று மாணவன் ரிஷிகுமார் கூறுகிறார்.