சிறப்புக் களம்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #heartattack - அதிகம் பகிரப்படும் வீடியோக்களும், காரணமும்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #heartattack - அதிகம் பகிரப்படும் வீடியோக்களும், காரணமும்

Sinekadhara

ஹார்ட் அட்டாக் குறித்த செய்திகளை நாம் தற்போது அடிக்கடி கேட்கிறோம். அதிலும் குறிப்பாக திடீர் மாரடைப்பால் ஏற்படும் இளம்வயது மரணங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சிறந்த டயட் மற்றும் கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்டவர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருவது அதிகரித்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் திருமணத்தின்போது மாலை மாற்றிய மணப்பெண் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துவிழுந்து உயிரிழந்தார்.

அதுமட்டுமல்லால் நடந்து செல்லும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் இளைஞர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சிசிடிவி வீடியோக்களும் சமூக ஊடகங்களில் தினசரி பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் குவியும் இதுபோன்ற வீடியோக்களால் டிவிட்டரில் #heartattack என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதன்கீழ், மாரடைப்பால் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் அதிகம் பகிரப்பட்டவை சில...

மாரடைப்பு என்றால் என்ன? அதன் பொதுவான அறிகுறிகள்...

ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை மாரடைப்பு என்கிறது மருத்துவம். இதன் பொதுவான அறிகுறிகள்

1. மூச்சுத்திணறல்
2. நெஞ்சு வலி
3. மார்பில் அசௌகர்யம்
4. தோள்பட்டை வலி
5. தாடை வலி
6. வலி அல்லது கழுத்து மற்றும் முதுகில் அசௌகர்யம்
7. பலவீனம்
8. தலைசுற்றல்
9. மயக்கம்
10. குளிர்ந்த வியர்வை

மாரடைப்பு பிரச்னை உள்ளவர்களிடையே அசைவுகள் இருக்கும். ஆனால் கார்டியாக் அரஸ்ட் பிரச்னை உள்ளவர்களுக்கு இதயம் துடிப்பது முற்றிலுமாக நின்றுவிடும்.

இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக இருபதுகளில் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட காரணமான சில பழக்கங்கள்...

1. புகைபிடித்தல்
2. ஸ்டீராய்டுகள் மற்றும் ப்ரோட்டீன் பவுடர்கள் பயன்படுத்துதல்
3. அதீத உடற்பயிற்சி
4. மன அழுத்தம்
5. அழுத்தத்துடன் உடற்பயிற்சி
6. உடற்பருமன்
7. ஹைபர் டென்ஷன் அல்லது உயர் ரத்த அழுத்தம்
8. high-fat டயட்
9. மருத்துவரின் ஆலோசனையின்றி உடற்பயிற்சி செய்தல்
10. தொடர் பரிசோதனை மேற்கொள்ளாமை