இந்த வருடம் நினைத்ததை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவு இருக்கிறது. இதற்கு 2 முக்கிய காரணங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவை,
1. சோலார் சைக்கிள் எனப்படும் சூரியனிலிருந்து வரும் வெப்ப கதிர்கள், அதிகளவு சக்திவாய்ந்ததாக இருக்கிறது. அதனால் வழக்கத்தை விட இந்தவருடம் வெப்பம் அதிகமாக இருக்கும்.
2. எல் நினோ முடிந்து வளிமண்டலத்தில் வறட்சி ஏற்பட்டுவிட்டது. இதனாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு கடற்பரப்பில் உள்ள நீர், குறிப்பிட்ட கால இடைவெளியில் சராசரியை விட அதிகமாக வெப்பமடைவதால் எல் நினோ நிகழ்வு ஏற்படுகிறது. இது குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது “கடல், வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம் மற்றும் காற்றின் மாறுதல்களால் ஏற்படும் விளைவுகள்தான் எல் நினோ” என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.
இந்தியாவை பொருத்தவரையில் எல்-நினோவானது 2005-ம் ஆண்டிலிருந்து கவனிக்கபடக்கூடிய நிகழ்வாக மாறியது.
1997 ஆம் ஆண்டிற்கு பின் 2015 ஆம் ஆண்டு வலுவான எல் நினோ ஆண்டாக அமைந்தது. அதனை தொடர்ந்து 2023, எல் நினோ ஆண்டாக அமைந்துள்ளது. ஆனால் ஒரு ஆறுதலான செய்தி, இந்த எல் நினோவானது நடப்பு ஏப்ரல் மாதத்துடன் நிறைவுக்கு வந்தது. ஆனாலும் அது சேமித்து வைத்த வெப்ப ஆற்றலை வளிமண்டலத்தில் வெளியேற்றியுள்ளது.
இதனால் வளிமண்டலம் அதிக வெப்பத்துடன் இருக்கிறது. இதனால் தற்பொழுது இந்தியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இது வரும் ஜூலை மாதத்துடன் நிறைவுக்கு வருவதால், ஜூலையிலிருந்து வானிலை சராசரியான நிலைப்பாட்டுக்கு வரும் என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.