wet bulb  PT
சுற்றுச்சூழல்

வெப்பத்தில் தகிக்கும் சென்னை.. அது என்ன ”வெட் பல்ப்” ? - நிபுணர்கள் விடுக்கும் அபாய எச்சரிக்கை என்ன?

காற்றில் கலக்கும் கார்பனால் சென்னையில் வெப்பநிலையானது 42 டிகிரியை தாண்டிய நிலையில், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். வெட் பல்பின் ரீடிங்கானது 35 டிகிரியை தாண்டினால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

Jayashree A

கத்திரி வெய்யில் முடிவடைந்த நிலையில் இன்றும் வெய்யிலானது குறைந்தபாடில்லை.. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல.. விலங்குகளும் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளாகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் வெப்பமானது அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. 108 டிகிரி ஃபாரன்ஹீட் (42 செல்ஷியஸ்) வெப்பமானது பதிவு செய்யப்படுவது இப்பொழுதெல்லாம் ஒரு சர்வ சாதாரண வெப்பநிலையாக பார்க்கப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

சென்ற வாரம் சென்னையில் வெப்பம் குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. வெட் பல்ப் பின் வெப்பநிலையானது 31.3 டிகிரியை தாண்டி அதிகரித்து வருவதாக சுற்றுப்புற சூழல் ஆரவலர்கள் தெரிவிக்கின்றனர்.

வெட்பல்ப்.. (Wet Bulb)

இதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். சாதாரண சூழ்நிலையில் ஒரு தெர்மாமீட்டரில் எந்த அளவு வெப்பம் பதிவிடப்படுகிறதோ அது தான் ட்ரை பல்ப் (Dry bulb) டெம்பரேச்சர் என்கின்றனர். இதில் வெப்பத்தின் அளவு தெரியவரும்.

வெட் பல்ப் (Wet bulb) டெம்பரேச்சர் என்பது ஒரு ஈரத்துணியை தெர்மாமீட்டரில் சுற்றும் பொழுது அது வெளிப்புற வெப்பநிலையிலிருந்து குறைந்து குளிர்ந்த நிலைக்குப் போகும். அதாவது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் அளவை அது காட்டும் இந்த ஈரப்பதத்தின் அளவானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.

நமது உடலிலிருந்து வியர்வை வெளியேரும் சமயம் நம் உடலானது குளிர்ந்து உடலில் வெப்பம் சேராமல் பாதுகாக்கும். அதே சமயம் காற்றில் ஈரப்பதமானது அதிகரிக்கும் பொழுது நமது உடலானது வியர்வையை வெளியிடாது. அதனால் உடலில் இருக்கும் வெப்பமானது அதிகரிக்கும்.

கடந்த வாரங்களில் சென்னையில் வெட் பல்ப் (Wet bulb) ரீடிங்கானது அதிகரித்து காணப்பட்டது. இதனால் உடலில் வியர்வை சுரப்பது குறைகிறது. வெப்பநிலை அதிகரிக்கிறது.

இதை குறைக்க கார்பன் உமிழ்வைக்குறைக்க வேண்டும் 2040க்குள் கார்பன் உமிழ்வானது முற்றிலும் நிறுத்தப்பட்டால் தான் வெப்பநிலையானது கட்டுக்குள் இருக்கும் என்றும், வெட் பல்ப் (Wet bulb) ஆனது தனது வெப்பநிலையில் 35 டிகிரி செல்ஸியஸை கடந்தால் மனிதனால் குறைந்தது 6 மணி நேரம் தான் உயிருடன் இருக்க முடியும் என்றும் ஆய்வாளார்கள் கூறுகின்றனர்