சுற்றுச்சூழல்

இமயமலையிலும் தண்ணீர் பஞ்சமா? - காரணமும் மக்கள் நாடும் தீர்வும்

இமயமலையிலும் தண்ணீர் பஞ்சமா? - காரணமும் மக்கள் நாடும் தீர்வும்

Sinekadhara

புவி வெப்பமயமாதலால் இமய மலைப்பகுதியில் வாழும் மக்கள், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அதில் ஒன்று தண்ணீர் பற்றாக்குறை. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகளின் பரப்பு குறைந்துவருகிறது. இதனால் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற உள்ளூர் மக்களின் உதவியுடன் செயற்கை பனிப்பாறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்கை பனிப்பாறைகளுக்கு ‘ஐஸ் ஸ்தூபா’ என்று பெயரிட்டுள்ளனர். குளிர்காலத்தில் ஓடைகள் மற்றும் ஆறுகளில் வீணாகச் செல்லும் தண்ணீரை உறையவைத்து, அதனை கோடைகாலத்தில் பயன்படுத்த இந்த செயற்கை பனிப்பாறைகள் உதவுகின்றன.