சுற்றுச்சூழல்

வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது

வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது

webteam

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்-ஏ விளங்குகிறது. குழந்தைகளின் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட வைட்டமின்-ஏ நுண்ணூட்டச் சத்து நான்கு மாதங்களில் குறைய ஆரம்பித்து ஆறு மாதங்களில் மிகவும் குறைந்து விடுகிறது. எனவே, வைட்டமின்-ஏ நுண்ணூட்டச் சத்து 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை கொடுப்பது அவசியமாகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள்,மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட மையங்களில் நாளை முதல் 24ஆம் தேதி வரை வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடக்கவுள்ளது.