சுற்றுச்சூழல்

வண்டலூர்: வெயிலின் தாக்கத்தை தணிக்க விலங்குகளுக்கு ஷவர் குளியல்

வண்டலூர்: வெயிலின் தாக்கத்தை தணிக்க விலங்குகளுக்கு ஷவர் குளியல்

kaleelrahman

வண்டலூர் பூங்காவில் வெயிலின் தாக்கத்தை தணிக்க விலங்குகளுக்கு ஷவர் குளியல். விலங்குகள் ஷவரில் குளித்து குதூகலிக்கும் காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை போன்ற காட்டு விலங்குகள் உள்ளன. இந்நிலையில், இப்போது கோடைக்காலம் என்பதால் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் விலங்குகள் வெயிலின் தாக்கத்தை தணித்துக் கொள்ள ஷவர் அமைக்கப் பட்டுள்ளது.

இதில் யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகள் குளித்து மகிழ்கின்றன. இதனை பொது மக்களும் பார்த்து ரசிக்கின்றனர். அதே போல் பொது மக்கள் விலங்குகளை பார்க்கச் செல்லும் போது வெயிலின் தாக்கத்தை தணித்துக் கொள்ளும் வகையில் சாரல் மழை போல ஷவர் தயார் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் சாரல் மழையில் நனைந்து மகிழ்கின்றனர்.