சுற்றுச்சூழல்

`ஜூன் 1 முதல் நெகிழியை 100% தவிர்க்க வேண்டும்’- திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு

`ஜூன் 1 முதல் நெகிழியை 100% தவிர்க்க வேண்டும்’- திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு

நிவேதா ஜெகராஜா

`ஜூன் ஒன்றாம் தேதி முதல் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள் 100% தவிர்க்க வேண்டும்’ என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில், திருச்சி மாநகர பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஹோட்டல் மற்றும் வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு, பாலிதீன் பைகள் உபயோகிப்பதை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், நெகிழிப்பொருட்கள் பயன்படுத்துவதை 100 சதவீதம் தடுக்கும் பொருட்டு மாற்று பொருட்கள் உபயோகபடுத்த வேண்டும் என்றும், வரும் 31.05.2022 தேதிக்குள் வியாபாரிகள் நெகிழிப்பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மஞ்சபை, பேப்பர் கவர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், அறிவுரைகள் வழங்கப்பட்டது. வரும் 01.06.2022 தேதி முதல் நெகிழிப்பொருட்கள் (plastic) பயன்படுத்துவதை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும் என்றும் வணிகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.