சுற்றுச்சூழல்

வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

webteam

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசும் நிலையில் வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படும் என்பதால், காலை 11 மணி முதல் 3 மணி வரையில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள சீரான இடைவெளியில் தண்ணீர் பருக வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

அதிக அளவில் இளநீர், பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், கர்ப்பிணிகளும், வயதானவர்களும் வெயிலால் அதிக பாதிப்பிற்குள்ளாவார்கள் என்பதால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வெளியே செல்வதை தவிர்ப்பதே அவர்களின் உடலுக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளனர். 

மேலும், குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள் நேரடியாக திடீரென அதீத வெயிலில் செல்வது உடலுக்கு தீங்கு என்றும் கூறப்படுகிறது.

வேலை நிமித்தம் உள்ளிட்ட காரணங்களால் வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க முடியாது என்பதால் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அதற்கான முன்னேற்பாடுகளுடன் செல்வதே சிறந்தது என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்