NLC PT Web
சுற்றுச்சூழல்

“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை - தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்!

இந்த ஆய்வறிக்கையை, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்கள் வழக்காக எடுத்து விசாரித்தனர்.

PT WEB

பூவுலகின் நண்பர்கள் நேற்று முன்தினம் “மின்சாரத்தின் இருண்ட முகம்” என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டது. 

இந்த ஆய்வறிக்கையை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் அமர்வு, தாமாக முன்வந்து (suo moto) இன்று வழக்காக விசாரித்தது. 

விசாரணையில் “இந்த ஆய்வறிக்கை குறித்து அறிக்கை சொல்லும் தரவுகள் தொடர்புடைய அமைப்புகளான NLC நிர்வாகம், மத்திய - மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.