சுற்றுச்சூழல்

டெங்கு கொசுக்களோடு மல்லுக்கட்ட வோல்பாசியா கொசுக்களை களமிறக்கிய சிங்கப்பூர் 

டெங்கு கொசுக்களோடு மல்லுக்கட்ட வோல்பாசியா கொசுக்களை களமிறக்கிய சிங்கப்பூர் 

EllusamyKarthik

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் சூழலில் சிங்கப்பூர் கொரோனாவோடு டெங்கு கொசுக்களையும், அதனால் பரவும் காய்ச்சலையும் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை முன்னெடுத்து வருகிறது. 

மொத்தமாக சுமார் 26000 பேர் சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கினால் பெரும்பாலான கட்டிடங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி இருந்ததை கொசுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொன்று இனப்பெருக்கம் செய்ததே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர் மருத்துவம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள்.

அதற்கு தீர்வு காணும் வகையில் ஆய்வுக்கூடங்களில் செயற்கையான முறையில் பாக்டீரியாவைச் சுமந்து செல்லும் கொசுக்களை வளர்த்து,டெங்கு பரவல் அதிகமுள்ள இடங்களில் அதனை பறக்க செய்கின்றனர். 

இதன் மூலம் டெங்கி கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதற்கு வோல்பாசியா புராஜக்ட் என பெயரிட்டுள்ளனர் சிங்கப்பூர் விஞ்ஞானிகள்.