சேலம் மாவட்ட வனப்பகுதியில் வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, டேனிஸ்பேட்டை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கத்தை வாய்ப்பாக பயன்படுத்தி வன உயிரினங்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து 'புதிய தலைமுறை'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, வன உயிரின வேட்டை மற்றும் கடத்தலை தடுக்க வனத் துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். வேட்டை தடுப்பு காவலர்கள் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.