சுற்றுச்சூழல்

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் அதிகளவிலான மீத்தேன் வாயு !

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் அதிகளவிலான மீத்தேன் வாயு !

webteam

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் வாயுக்களை அதிகமாக வெளியிடுவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி கடந்த 1900 ஆம் ஆண்டு 6000 ஹெக்டேர் நிலப்பரப்பளவு விரிந்து இருந்தது. ஆனால் தற்போது அது வெறும் 690 ஹெக்டேராக சுருங்கியுள்ளது. பள்ளிக்கரனை சதுப்பு நில பகுதியில் எர்கெட் (erget),பெலிக்கன் (pelican),ஹிரான் (heron),ப்ளெமிங்கோ (flamingo) ஆகிய பறவைகள் காணப்படுவது வழக்கம்.

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி 349 வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இருப்பிடமாக  இருந்துவருகிறது. இதில் 133 பறவை வகைகள், 10 வகையான பாலூட்டிகள், 21 ஊர்வன வகைகள், 50 வகையான மீன்கள் மற்றும் 29 வகை புல்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது. இத்தகையை அரிய இனங்களுக்கு இருப்பிடமாக இருக்கும் இந்த பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி கார்பனை உள்வாங்கும் பகுதியாக செயல்படும்.

ஆனால் சமீபத்திய ஆய்வில் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் கார்பனை உள்ளிழுக்காமல் கார்பனை வெளியிடும் நிலமாக இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் ஒராண்டிற்கு 8.4 ஜிகா டன்கள்  மீத்தேன் வாயுவை வெளியிடுவதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. மேலும் இந்நிலம் ஒராண்டிற்கு 18.2 ஜிகா டன்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. அதேபோல பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் ஒராண்டிற்கு வெறும் 0.0020 ஜிகாகிராம் அளவிற்கு தான் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதாக ஆய்வு காட்டுகிறது. 

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் ஆராய்ச்சி மையத்தின் முன்னால் இயக்குநர் ஏ.ராமசந்திரன், “மீதேன் அதிகமாக வெளிப்படுவதற்கு பள்ளிக்கரணையில் கொட்டப்பட்டிற்கும் குப்பைகள் தான் காரணம். இங்கு வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை விட மீத்தேன் வாயு வெளியாவது தான் மிகப் பெரிய பிரச்சனை. ஏனென்றால், மீத்தேன் வாயு வளிமண்டலத்தில் 12 ஆண்டுகள் இருக்கும். இதனால் அது கிரீன்ஹொவுஸ் விளைவு அதிகமாகும்” என்று தெரிவித்தார்.