DROSERA PELTETA - பூச்சி உன்னி தாவரம் pt desk
சுற்றுச்சூழல்

நீலகிரி: ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ள அதிசய தாவரம் - ஏன் தெரியுமா?

இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான நீலகிரியில் தற்போது வளர்ந்துள்ள தாவரம் ஒன்று ஆராய்ச்சியாளர்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

webteam

செய்தியாளர்: மகேஷ்வரன்

எழில் பூத்துக்குலுங்கும் உயிர்ச்சூழல் மண்டலமான நீலகிரியில் பல்வேறு அரிய தாவர வகைகள் உள்ளன. கண்டறியப்பட்டவை பல... இன்னும் கண்ணுக்கு தெரியாதவை பல. அந்த வகையில் DROSERACEA குடும்பத்தை சேர்ந்த பூச்சி உன்னி தாவரத்தை சேர்ந்த 3 வகை தாவரங்கள் இங்கு உள்ள மலைப்பகுதியில் உள்ளன. அதிலும் இந்த வகை பூச்சி உண்ணும் தாவரங்கள் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் மட்டும் காணப்பட்டன.

DROSERA PELTETA - பூச்சி உன்னி தாவரம்

DROSERA BURMANNHI, DROSERA INDICA, DROSERA PELTETA ஆகிய பூச்சு உண்ணி தாவரங்கள் இங்குள்ள புல்வெளி பகுதிகளில் காணப்பட்டன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது DROSERA PELTETA தாவரமாகும். சில ஆண்டுகளாக இந்த வகை தாவரத்தை காண முடியாத நிலையில், இந்த பூச்சி உண்ணும் தாவரம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூடலூர், நடுகாணியில் உள்ள புல்வெளிகளில் வளர்ந்துள்ளன.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூரை சேர்ந்த தாவர ஆராய்ச்சியாளர் சுந்தரேசன் என்பவர் முதன்முறையாக இந்த வகை தாவரங்களை கண்டறிந்தார். இந்த DROSERA PELTETA தாவரம், தங்கத்தை பொடியாக்கும் தன்மை கொண்டது என்றார் அவர். DROSERA PELTETA-வுடன் இதே குடும்பத்தைச் சேர்ந்த DROSERA BURMANNHI,  DROSERA INDICA ஆகிய பூச்சி உண்ணும் தாவரங்களும் இந்த ஆண்டு புல்வெளிகளில் வளர்ந்துள்ளன.

DROSERA PELTETA

பொதுவாக சத்துக்கள் குறைந்த மண் பகுதியில் மட்டுமே இந்த வகை பூச்சி உண்ணும் தாவரங்கள் வளரும். இந்தத் தாவரத்தின் ஈர்ப்புத் தன்மையைக் கண்டு பூச்சிகள் தானாக வந்து இதில் சிக்கிக் கொள்ளும்.