சுற்றுச்சூழல்

நீலகிரி: காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை அறிய 5 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி

நீலகிரி: காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை அறிய 5 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி

kaleelrahman

பிதர்காடு பகுதியில் ஊருக்குள் காட்டு யானைகள் வருவதை கண்டறிய 5 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவிகள் (Early Warning System) பொருத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது பிதர்காடு வனச்சரகம். இங்குள்ள பாட்டவயல், கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சமீப நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், காட்டு யானைகள் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக கரும்பன் மூலா, கோட்டபாடி, ஓர்கடவு, குளி மூலா மற்றும் எடத்தால் ஆகிய 5 பகுதிகளில் யானைகள் ஊருக்குள் வருவதை கண்டறியும் முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து யானைகள் தொடர்ச்சியாக வரும் பாதைகளில் இந்த கருவிகள் பொருத்தபட்டுள்ளது. யானைகள் கருவியை கடக்கும் போது அது ஒலி எழுப்பும். அதன் மூலம் யானைகள் ஊருக்குள் வந்ததை தெரிந்து கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். இதைத் தொடர்ந்து கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் இந்த கருவிகளை பொருத்தி வருகின்றனர்.