சுற்றுச்சூழல்

இன்சுலின் இம்சையா..? இனி ஒரு மாதத்திற்கு ஒரே ஊசி போதும்!

இன்சுலின் இம்சையா..? இனி ஒரு மாதத்திற்கு ஒரே ஊசி போதும்!

webteam

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிலர் வாரம் ஒருமுறை அல்லது தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கின்றனர். தினமும் ஊசி போட்டுக் கொள்வதை தவிர்க்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய மருந்து மூலம் மாதம் ஒரு தடவை மட்டும் ஊசி போட்டால் போதும். இதை 2 ஆம் நிலை (டைப் 2) நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். தற்போது 2 ஆம் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு குளுககான்-லைக் பெப் டிட்-1 என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது கணையத்தில் இருந்து இன்சுலீனை வெளியேற்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. தற்போது புதிதாக கண்டு பிடித்துள்ள மருந்து ஜெல் போன்று இருக்கும். இதை ஊசி மூலம் செலுத்தியவுடன் உடலில் தேங்கிவிடும். பின்னர் உடல் வெப்பத்தின் மூலம் சிறிது சிறிதாக உருகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

இந்த மருந்து விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. தற்போது பயன்படுத்தப்படும் மருந்தைவிட 3 மடங்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தியது. எனவே 2 ஆம் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு இம்மருந்தை பயன்படுத்த முடியும் என்று மருந்து கண்டுபிடித்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.