பூவுலகில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் இடப்பெயர்வுக்கு பிரசித்தி பெற்றது பறவைகள்தான். பூமியின் சூழலியலை சரியாக உணர்ந்து அதற்கு தகுந்தபடி செயல்படுவதும் பறவைகள்தான். அதுவும் எல்லையே இல்லாமல் பறந்து விரிந்துள்ள இயற்கையை ஆட்சி செய்வதும் இந்த பறைவகள்தான். அந்த வகையில் இடப்பெயர்வுக்கு உலக அளவில் அதிகம் பிரசித்தியான ஃபிளமிங்கோ (நாரை) பறவைகள் தற்போது இந்தியாவில் முகாமிட்டுள்ளன.
அண்மையில் கூட தமிழ்நாட்டின் கோடியக்கரை பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்திருந்த ஃபிளமிங்கோ பறவைகளின் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி இருந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் பாலைவனத்தில் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட ஃபிளமிங்கோ பறவை கூடுகளின் வீடியோ காட்சிகள் காண்பவரை மயக்க செய்கிறது.
மொத்தம் 16 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஃபிளமிங்கோ பறவை கூடுகளும், அதில் உள்ள முட்டைகளும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள குட்கர் தேசிய பூங்கா பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. குளிர் காலங்களில் இந்த பறவைகள் இங்கு வந்திருந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.