சுற்றுச்சூழல்

சிட்டுக்குருவிகள் பெருக்கத்தை அதிகரிக்க ஆளுநர் மாளிகையில் கூடுகள் பொருத்திய ஆளுநர் தமிழிசை

சிட்டுக்குருவிகள் பெருக்கத்தை அதிகரிக்க ஆளுநர் மாளிகையில் கூடுகள் பொருத்திய ஆளுநர் தமிழிசை

sharpana

இன்று உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சிட்டுக்குருவிகள் வந்து தங்குவதற்கான கூண்டுகளை அங்குள்ள மரங்களில் பொருத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவிலுள்ள 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அழிந்துவரும் பறவை இனங்களில் ஒன்றாகிவிட்ட சிட்டுக்குருவிகள் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று கருத்தை முன்வைத்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகை ராஜ் நிவாஸில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரங்களில் சிட்டுக்குருவிகள் வந்து தங்குவதற்கான கூடுகளைப் பொருத்தி  பாராட்டுகளை பெற்றுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் “ராஜ் நிவாஸில் சிட்டுக்குருவிகளின் பெருக்கத்தை அதிகரிக்க குறைந்த விலையிலான கூடுகளை மரங்களில் பொருத்தியுள்ளோம்” என்று அக்கறையுடன் விழிப்புணர்வூட்டியிருக்கிறார்.