சுற்றுச்சூழல்

நன்றாகத் தூங்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்

Rasus

ஆண்கள் சரியான நேரத்திற்கு தூங்க செல்வது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனவும் மேம்படுத்தும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தூக்கம் ஒவ்வொருவருக்கும அவசியம். ஒருவர் சரியாக தூங்கவில்லை எனில் அவருக்கு உடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 18 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி வரை கட்டாயமாகத் தூங்க வேண்டும் என The National Sleep Foundation என்ற அமைப்பு பரிந்துரைத்துள்ளது. சீனாவில் உள்ள பல்கலைக்கழக வல்லுநர்கள் 1000 ஆண்களிடம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 8 முதல் 10 மணி நேரம் தூங்குபவர்களுக்கு விந்தணு குறைபாடு நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என தெரிவிக்கின்றனர்.

இரவு நேரத்தில் கண்விழித்து வேலை பார்ப்பவர்கள் மற்றும் இரவு வேலைக்கு செல்பவர்கள் தூங்கும் நேரத்தை சரியாக கடைபிடிப்பதில்லை. எனவே, இவர்களை பல்வேறு நோய்கள் எளிதாக தாக்குகின்றன. குறைந்தது. 6 முதல் 7 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் நம் ஆயுளின் ஒவ்வொரு நாளையும் குறைத்து கொள்வதற்கு சமம். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கும் ஒரு ஆணின் விந்தணுவின் எண்ணிக்கையை விட 6 மணி நேரத்திற்கும் கீழ் தூங்குபவர்களின் விந்தணுக்கள் 25 சதவிகிதம் குறைவாக காணப்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.