சுற்றுச்சூழல்

தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்

தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்

jagadeesh

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ‘MADRAS EYE’ எனப்‌படும் ‘இளஞ்சிவப்பு கண்’ நோய் பரவி வருவதாக எழும்பூர் அரசு மருத்துவமனை‌யின் கண் மருத்துவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். 

பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் ஒன்றான MADRAS EYE பாதிப்பால், தினமும் 15 முதல் 20 பேர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை ‌எடுத்து வருவதாக கூறிய ராஜசேகர், ‘மெட்ராஸ் ஐ’யால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணிலிருந்து வரும் திரவரத்தின் மூலம் மற்றவருக்கு இந்த தொற்று பரவுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த பாதிப்பில் இருப்பவர்கள் தனித்தனியே கைக்குட்டைகள், படுக்கைகளை பயன்படுத்துவது, நன்கு கை கழுவுதல் போன்றவற்றால் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்கிறார் கண் மருத்துவர் ராஜசேகர். மிக முக்கியமாக கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் தொற்று நோய் பரவுவதை தடுக்க முடியும்‌ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.