சுற்றுச்சூழல்

வால்பாறை 'செக் போஸ்ட்' சிசிடிவியில் சிக்கிய சிறுத்தை!

வால்பாறை 'செக் போஸ்ட்' சிசிடிவியில் சிக்கிய சிறுத்தை!

jagadeesh

கோவை மாவட்டம் வால்பாறையில் பாதுகாப்பு சோதனை மையத்தில் உலாவிய சிறுத்தை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள், காட்டு நாய்கள், கரடிகள் போன்றவை அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிவது சிசிடிவி கேமராவில் பதிவாவது வாடிக்கை.

மேலும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து ஆடு நாய் கோழி போன்றவைகளை வேட்டையாடுவதும் அவ்வப்போது நிகழும். இந்நிலையில் வால்பாறை அருகே சோலையார் அணை காவல் நிலையம் மலுக்கப்பாரை சோதனைச்சாவடி நிலையத்தில் இரவு சுமார் 11 மணி அளவில் சிறுத்தையொன்று சோலையார் ஆணை சாலையில் நடந்து சென்றது.

இதனை இரவு காவல் பணியில் உள்ள காவல்துறையினர், சத்தம் போடாமல் பார்த்து உள்ளனர். இந்தக் காட்சி சோதனைச்சாவடியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.