hot pt desk
சுற்றுச்சூழல்

‘கடந்த 1 லட்சம் ஆண்டுகளில் அதீத வெப்பமான மாதம் இதுதான்’ - ஐ.நா சொன்ன பகீர் தகவல்!

உலகளவில் மிகவும் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜூலை மாதம் பதிவாகியுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளனர்.

webteam

காலநிலை மாற்றம் காரணமாக உலக வெப்பமயமாதல் என்பது அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகளவில் கடந்த 1,20,000 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜுலை மாதம் பதிவாகியுள்ளதாக ஐ.நா அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு ஜூலை மாதத்தில் சராசரியாக ஒன்றரை டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.