சுற்றுச்சூழல்

விலங்குகளை தத்தெடுக்க முன் வருக: வண்டலூர் பூங்கா இயக்குநர் வேண்டுகோள்

விலங்குகளை தத்தெடுக்க முன் வருக: வண்டலூர் பூங்கா இயக்குநர் வேண்டுகோள்

JustinDurai
பொதுமக்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க முன்வர வேண்டும் என அதன் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 182 இனங்களைச் சேர்ந்த 2,382 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களும், HCL போன்ற பெருநிறுவனங்களும் விலங்குகளை தத்தெடுத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகின்றனர். அந்தவகையில், சில தனியார் பெரு நிறுவனங்கள் சார்பில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதேபோல், பலரும் முன்வந்து விலங்குகள் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வண்டலூர் உயிரியல் பூங்காவின் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.