சுற்றுச்சூழல்

தனியாரால் பராமரிக்கப்படும் 1,985 காண்டாமிருகங்கள்: கொம்புகளை அறுத்து சேமித்து வைப்பு

தனியாரால் பராமரிக்கப்படும் 1,985 காண்டாமிருகங்கள்: கொம்புகளை அறுத்து சேமித்து வைப்பு

JustinDurai
தென் ஆப்ரிக்காவில், காண்டாமிருங்களை வளர்த்து வருபவர், அரசின் ஆதரவு இல்லாததால் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவின் வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜான் ஹூம் ஆயிரத்து 985 காண்டாமிருகங்களை பராமரித்து வளர்த்து வருகிறார். கொம்புகளுக்காக காண்டாமிருகங்கள் கொல்லப்படும் நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை அறுத்து சேமித்து வைத்துள்ளார் ஜான். சர்வதேச அளவில் காண்டாமிருகத்தின் கொம்புகளின் தேவை உள்ள நிலையில், ஏற்றுமதிக்கு தென்னாப்ரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், காண்டாமிருகங்களை பராமரிக்க முடியவில்லை வேதனை தெரிவித்துள்ளார்.