சுற்றுச்சூழல்

டாக்டருக்கே இரத்தக்கொதிப்பு வந்தால் என்ன செய்வது?

Rasus

உலக உயர் ரத்தஅழுத்த தினமான இன்று டாக்டர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து வருகிறது ஒரு என்று ஆய்வு தெரிவிக்கிறது.

“காய்ந்து போன மரமெல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும். ஆனால் நதியே காய்ந்து போனால் என்ன செய்வது” என்று சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் படத்தில் ஒரு வசனம் வரும். அதுபோல மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றும் டாக்டர்களுக்கே ரத்த அழுத்தம் அதிகரித்து வருகிறது என்று இந்திய மருத்துவக் கழகம், இருதயப் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் எரிஸ் வாழ்க்கை அறிவியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரத்தக்கொதிப்பால் ஆண்டுக்கு 7 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான டென்ஷனால் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. வயதுவந்த ஒருவருக்கு 120/80 என்ற அளவில் ரத்தக்கொதிப்பு இருக்கலாம். ஆனால் அதற்கு அதிகமாக இருந்தால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. ரத்தக்கொதிப்பு தினத்தை ஒட்டி நாட்டில் உள்ள 500 டாக்டர்களுக்கு ஒரே நாளில் மருத்துவமனையிலும், வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. இதில் 20 சதவீத மருத்துவர்களுக்கு மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்கும்போது ரத்தக்கொதிப்பு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. குறைவான தூக்கமும் தொடர்ந்து மருத்துவ ரீதியிலான பிரச்னைகளைக் கையாள்வதும் இதற்கு காரணம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.