சுற்றுச்சூழல்

மக்களை தேடி மருத்துவம்: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மூலிகை கன்றுகள்

மக்களை தேடி மருத்துவம்: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மூலிகை கன்றுகள்

நிவேதா ஜெகராஜா
இந்திய மருத்துவம் சித்தா பிரிவு சார்பில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்’ கீழ் பயணிகளுக்கு இன்றைய தினம் மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மற்றும் அன்னை சித்தா மற்றும் யோகா மருத்துவ கல்லூரி இணைந்து மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் வல்லாரை, ஆடாதொடை, தூதுவளை, நிலவேம்பு உள்ளிட்ட 20 வகையான மூலிகை தாவர கன்றுகள் 500 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் வனஜா, வி.சி.நெடுஞ்செழியன், ரோட்டரியன் செழியன் மற்றும் அன்னை கல்விக் குழும தலைவர் அன்வர் கபீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழங்கினர்.