சுற்றுச்சூழல்

குட்டி யானையை தோளில் தூக்கி சுமந்து செல்லும் தமிழக வனத்துறை ஊழியர்.. வைரலாகும் பழைய வீடியோ

குட்டி யானையை தோளில் தூக்கி சுமந்து செல்லும் தமிழக வனத்துறை ஊழியர்.. வைரலாகும் பழைய வீடியோ

JustinDurai

குட்டி யானையை தோளில் தூக்கி சுமந்து கொண்டு, தாய் யானையிடம் சேர்க்க  முயற்சி எடுக்கும் வனத்துறை ஊழியரின் பழைய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான (IFS) சுசாந்தா நந்தா, சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தாய் யானையை விட்டு பிரிந்துவந்த குட்டி யானை ஒன்று பள்ளத்தில் விழுந்து சேற்றில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட வனத்துறை ஊழியரான பழனிச்சாமி சரத்குமார் என்பவர், சுமார் 100 கிலோ எடையிருக்கும் அந்தக் குட்டி யானையை அலேக்காக தூக்கி தோளில் சுமந்து கொண்டு சேற்றை கழுவுவதற்காக தண்ணீர் தொட்டியை நோக்கி ஓடுகிறார்.  

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதும், தற்போது மீண்டும் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் பழனிச்சாமி சரத்குமாரை 'பாகுபலி' என்றும் குறிப்பிட்ட அவர், குட்டியை தாய் யானையிடம் சேர்க்க வனத்துறையினர் தோளில் சுமந்து கொண்டு காடுகாடாக சென்ற விஷயத்தை நினைவுப்படுத்தி, வனத்துறை ஊழியர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.