சுற்றுச்சூழல்

மீன்களுக்கு மத்தியில் ஆழ்கடலில் குவிந்துள்ள முகக்கவசங்கள்: வீடியோ!

மீன்களுக்கு மத்தியில் ஆழ்கடலில் குவிந்துள்ள முகக்கவசங்கள்: வீடியோ!

webteam

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரின் அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ள முகக்கவசம் கடலூர் அருகே ஆழ்கடலில் குவிந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புதுவை மாநிலத்தை சேர்ந்த ஆழ்கடல் ஸ்கூபா டைவர் அரவிந்த் குழுவினர் வங்கக்கடலில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்கு சென்றிருந்தனர். அப்போது பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் ஆழ்கடலில் மீன்களுக்கு மத்தியில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அங்கிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், அறுந்து கிடக்கும் மீன் வலைகள் மற்றும் முகக்கவசங்களை சேகரிக்கும் பணியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகளை ஆற்றில் கொட்டாமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.