ஆபத்தான ஜாம்பி வைரஸ் ட்விட்டர்
சுற்றுச்சூழல்

வருகிறதா ‘ஜாம்பி வைரஸ்’? பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் மிகப்பெரிய ஆபத்து..!

ஆபத்தான வைரஸ்களின் உறைவிடமாக உள்ளது சைபீரிய பகுதியில் இருந்து சில வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

PT WEB

பருவநிலை மாற்றத்தால் பெருமழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை மனிதகுலம் சந்தித்து வருகிறது. ஆனால் இதைவிட மோசமான புதுவிதமான பாதிப்பு ஒன்றுக்கும் வாய்ப்புள்ளதாக கூறி எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இயற்கை பேரிடர்கள்

உலகில் வடதுருவத்தில் இருக்கும் ஆர்டிக் பகுதியில் பனிப் போர்த்தி காணப்படும். இந்த அழகுக்கு அடியில் ஒரு ஆபத்து உள்ளது. அது என்னவெனில் பணிக்கு அடியில் பல்லாயிரம் வருடங்களாக வைரஸ் கிருமிகள் உறங்கிக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது அதிக வெப்பநிலை உயர்வு காரணமாக ஆர்டிக் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் ஆபத்தான வைரஸ்கள் தன் இருப்பிடத்திலிருந்து வெளியேறி மனிதர்களுக்கு பெரிய ஆபத்தை தர வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூமிப்பந்தின் ஒருபகுதியில் உள்ள ஆர்டிக் பணி பிரதேசத்தில் பெர்மா ஃபாஸ்ட் என்ற பகுதிதான் ஆபத்தான வைரஸ்களின் உறைவிடமாக உள்ளது. இதுதொடர்பாக சைபீரிய பகுதியில் இருந்து சில வைரஸுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பெரும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட 48,500 வருடங்களாக புதையுண்டுள்ள இவை வெளிவந்தால் பேராபத்து என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இந்த வைரஸ்கள், ‘ஜாம்பி வைரஸ்’ என்று அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இது மற்றுமொரு அடியாக அச்சத்தை விதைத்துள்ளது.