சுற்றுச்சூழல்

வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது - ஆரோவில் அறக்கட்டளைக்கு பசுமைதீர்ப்பாயம் உத்தரவு

வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது - ஆரோவில் அறக்கட்டளைக்கு பசுமைதீர்ப்பாயம் உத்தரவு

Veeramani

வனப்பகுதியில் சுற்று வட்டச்சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்ட கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் அறக்கட்டளை எந்தவித அனுமதியின்றி கட்டுமானங்களை மேகொண்டுள்ளதாகவும், தற்போது கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக வனப்பகுதி என்ற கருதப்படும் பகுதியில் ஏராளமான மரங்களை வெட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் எனவும், அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வசூலிக்க வேண்டும் எனவும், அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் ஆரோவில் அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தது.