சுற்றுச்சூழல்

தமிழகத்தில் 5,600 பேருக்கு டெங்கு சிகிச்சை

தமிழகத்தில் 5,600 பேருக்கு டெங்கு சிகிச்சை

webteam

தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை டெங்குவால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரத்து 600 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், 250 வீடுகளுக்கு ஒரு பணியாளர் என கொசு ஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு, கன்னியாகுமரி, கோவை என மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், சிறப்பு மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் குழந்தைசாமி தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 14 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.