சுற்றுச்சூழல்

தினமும் ஷாம்பூ பயன்படுத்தினால் டேஞ்சர்!

Rasus

தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. 

கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், நமது உடலில் சிறிய அளவில் சுரக்கும் ஆல்டிஹைடின், புற்றுநோயை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ, காஸ்மெடிக்ஸ், மரச்சாமான்கள் மற்றும் ஆல்ஹால் உள்ளிட்ட பொருட்களில் கலந்துள்ள ரசாயனங்கள், நாளுக்கு நாள் நமது உடலை பாதிக்கிறது. 
இதன்மூலம் ஆல்டிஹைட்ஸ் அதிகமாகி உடலில் உள்ள டி.என்.ஏக்கள் மற்றும் செல்களை பாதிப்பதால், புற்றுநோயை விளைவிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட உயிரணுக்களை கொண்டவர்களை இந்த நோய் எளிதாகத் தாக்குகிறது. 
அதிகளவில் மது அருந்துவதால் ஜப்பான், கொரியா, மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.