சுற்றுச்சூழல்

“மன அழுத்தம் ஏற்படுத்தும் புதிய வகை சிக்கல்கள்” - ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு

“மன அழுத்தம் ஏற்படுத்தும் புதிய வகை சிக்கல்கள்” - ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு

webteam

மன அழுத்தத்திலுள்ள போது அதிக கலோரி உணவுகளை உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என ஒரு ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் சந்திக்கும் உடல் சாந்த முக்கிய பிரச்னை அதிக உடல் எடை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதற்கு அதிக பேர் நம்புகின்ற ஒரே காரணம் அதிக உணவை உட்கொள்வது. அத்துடன் சரியான உடற்பயிற்சி இல்லாதது. இவை இரண்டும்தான் பிரதான காரணம் என நினைக்கிறார். இதன் உண்மை தன்மையை உறுதி செய்ய மக்களின் உணவு பழக்கம் குறித்து உலகளவில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு ஆய்வில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. 

அதன்படி நாம் மன அழுத்தத்திலிருக்கும் போது அதிக கலோரி கொண்ட உணவு பொருட்களை உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘கார்வென் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ரிசர்ச்’ என்ற அமைப்பு ஆய்வை நடத்தியுள்ளது. அதில் எலியை வைத்து ஒரு சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த எலி மன அழுத்ததுடன் இருந்த போது உயர்ந்த கலோரி உணவை எடுத்து கொண்டால் அதன் உடல் எடை அதிகரித்துள்ளது. ஆனால் இதே உணவை அந்த எலி சாதாரண மனநிலையில் உள்ளபோது உட்கொண்ட போது உடல் எடை அதிகரிப்பது சற்று குறைந்துள்ளது. 

இது குறித்து ஆய்வாளர்கள், “மன அழுத்தத்தின் போது மூளைக்குச் செல்லும் பாதையிலுள்ள இன்சூலின் இந்த எடை அதிகரிப்பதற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் அதிகரிக்கும் போது மூளையிலுள்ள என்.பி.ஒய் மாலிக்குள் சுரப்பை இன்சூலின் அதிகரிக்கிறது. இந்த என்.பி.ஒய் மாலிக்குள் அதிகமாகும் போது உயர்ந்த கலோரி கொண்ட உணவை உட்கொண்டால் அது உடல் பருமனுக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே நாம் மன அழுத்ததிலுள்ள போது உட்கொள்ளும் உணவில் அதிக கவனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.