சுற்றுச்சூழல்

150 ஆண்டுகள் பழமையான மரத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

150 ஆண்டுகள் பழமையான மரத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

JustinDurai
சென்னை மருத்துவக் கல்லூரியில் 150 ஆண்டுகள் பழமையான ஆனைப்புளி பெருக்க மரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
உலகின் பழமையான மர வகைகளில் ஒன்றான ஆனைப்புளி பெருக்க மரம் ஆப்பிரிக்க கண்டத்தை சார்ந்தது. இதன் இலைகள் வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது. மரத்தின் அனைத்துப் பாகங்களும் ஆப்பிரிக்க பழங்குடியினரால் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 37 அடி சுற்றளவு கொண்ட தண்டும், 65 அடி உயரம் கொண்ட இந்த அரிய மரம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே, பழமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை மருத்துவக் கல்லூரியின் மகத்தான பிரதான சின்னங்களில் ஒன்றாக மிளிர்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்மைகளைக் கொண்ட இந்த மரத்தை பற்றிய கல்வெட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.