டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, அக்டோபர் 21 ம் தேதிக்குள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சொல்வது என்ன? பூவுலகின் நண்பர்களின் விரிவான விளக்கம்
முன்னதாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, பிராந்திய மொழிகளில் வெளியிட, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், அதுவரை வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும், மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் மத்திய அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கருத்து கேட்பை விரிவாக நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.