சுற்றுச்சூழல்

'சுற்றுச்சூழலை காக்க வரி விதிப்பதே சிறந்த வழி' - சர்வதேச நிதியம்

'சுற்றுச்சூழலை காக்க வரி விதிப்பதே சிறந்த வழி' - சர்வதேச நிதியம்

webteam

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆபத்தான வாயுக்கள் வெளியாவதை தடுக்க, சுற்றுச்சூழல் வரி விதிப்பது தான் சிறந்த வழியாக இருக்கும் என சர்வதேச நிதியம் (International Monetary Fund) அறிவுறுத்தியுள்ளது.

காலநிலை மாற்றங்கள், பனிக்கட்டி உருகுதல் போன்ற சுற்றுச்சூழல் மாற்றத்துக்கு வெப்பமயமாதல் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. காற்றை மாசுபடுத்தும் வாயுக்களால் தான் பூமியானது வழக்கத்துக்கு மாறாக சூடாகிறது. அப்படி காற்றை மாசுபடுத்தும் வாயுக்களை பசுமை குடில் வாயுக்கள் என்கிறோம்.

பசுமைகுடில் வாயு வெளியாவதை தடுக்க, ஒரு டன் கரியமில வாயு வெளியேற்றத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வரி விதிக்கலாம் என சர்வதேச நிதியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதற்கான முயற்சிகளில் பிரான்ஸ் களமிறங்கியபோது, ஆரம்பத்திலேயே மஞ்சள் அங்கி போராட்டம் வெடித்தது. இதனால், இந்த திட்டத்தை கிடப்பில் போடும் நிலைக்கு பிரான்ஸ் அரசு தள்ளப்பட்டது. இதனால், சுற்றுச்சூழலுக்கான வரி விதிப்பு உலக அளவில் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதே சமயம் உலகிலேயே அதிக அளவில் பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றும் சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஒரு டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை வரி விதிப்பதன் மூலம், 30 சதவீத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.