சுற்றுச்சூழல்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பல் பிரச்னைகள் வராது : பல் மருத்துவர் சம்பத் ஆலோசனை

Veeramani

பல் போனால் சொல்போச்சு என்பது பழமொழி. அதற்கேற்றார்போல நன்றாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுமைக்கும் பற்கள் மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதில்லை என்கிறார் பல் மருத்துவர் சம்பத்.

இதுபற்றி கூறும் அவர் “ குழந்தை பிறந்த ஆறுமாதத்திலேயே அவர்களுக்கு பற்கள் முளைக்க தொடங்குகிறது. அதனால் குழந்தைகளுக்கு குறைந்தது 2 முதல் இரண்டரை வயதுவரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைகளின் வாய், தாடை உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக இயங்கும். இதனால் குழந்தைகளுக்கு தாடை எலும்புகள் நன்றாக வளர்கிறது, பற்களின் ஈறுகளும் நன்றாக வலுப்பெறும். எனவே அவர்களுக்கு பல்தொடர்பான பிரச்னைகள் எளிதில் வராது.

பற்கள் சரியான வரிசையில் இல்லாமல் இருப்பதற்கு காரணம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதுதான். இதனால்தான் தாடை எலும்புகள் வளராமல் பற்களின் வரிசையமைப்பில் மாற்றம் வருகிறது. இவ்வாறான சிக்கல் இருந்தால் அவர்களுக்கு வாழ்முழுதும் உடல்சார்ந்த பிரச்னைகள் இருக்கும். எனவே பல் ஆரோக்கியம் வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்” என்கிறார்

கரு உருவான முதலே பற்களை பாதுகாக்க வேண்டும்:

 “கரு உருவான மூன்று மாதத்திலேயே பற்கள் வளர தொடங்குகிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். அவர்களின் மனம், உடல் இரண்டும் நன்றாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தின்போது உப்பின் அளவு குறைவாக உள்ள தண்ணீரையே குடிக்க வேண்டும், இதனால் குழந்தைகளின் பற்கள் நன்றாக வளர தொடங்கும்” என்கிறார்.