சுற்றுச்சூழல்

வேகமாக அழிக்கப்பட்டு வரும் அமேசான் மழைக்காடுகள்: காரணம் என்ன?

வேகமாக அழிக்கப்பட்டு வரும் அமேசான் மழைக்காடுகள்: காரணம் என்ன?

Veeramani

உலகின் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட அமேசான் காடுகள் அழிக்கப்படுவது ஆண்டுக்கு ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே அதிக அளவில் மழையை ஈர்க்கும் தன்மை கொண்ட மழைக்காடுகள் பிரேசிலில் அமைந்துள்ளன. அமேசான் காடுகள் என அழைக்கப்படும் இந்த மழைக்காடுகள், வணிக நோக்கம் கொண்ட வர்த்தகர்களால் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



காடுகள் அழிப்பால் மழை வளம் குறைவது மட்டுமின்றி, வன உயிரினங்களும் தாவர வகைகளும் கருவறுக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அமேசான் காடுகளைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அழிக்கப்பட்ட அளவை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இரண்டு மடங்கு அழிக்கப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.