சுற்றுச்சூழல்

மேட்டுப்பாளையம்: மீண்டும் ஊருக்குள் நடமாட தொடங்கிய 'பாகுபலி' யானை

மேட்டுப்பாளையம்: மீண்டும் ஊருக்குள் நடமாட தொடங்கிய 'பாகுபலி' யானை

நிவேதா ஜெகராஜா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனத்துறைக்கு போக்கு காட்டிய பாகுபலி யானை, மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் பாகுபலி என்ற காட்டு யானையை பிடித்து, அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில் பாகுபலியைப் பிடிக்க கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் 3 நாட்கள் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் பாகுபலிக்கு ஜிபிஎஸ் பொருத்தும் பணியை தற்காலிகமாக கைவிட்டனர். இந்நிலையில் பாகுபலி யானை மீண்டும் ஊருக்குள் நடமாட தொடங்கியுள்ளதால் வனத்துறையினர் அதனை பிடிக்கும் பணியில் மீண்டும் முழுவீச்சில் இறங்கவுள்ளனர்.