சுற்றுச்சூழல்

"விமான நிலையத்தை சுற்றி பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும்"- சென்னை விமான நிலையம்

"விமான நிலையத்தை சுற்றி பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும்"- சென்னை விமான நிலையம்

Veeramani

போகி பண்டிகையன்று விமான நிலையத்தை சுற்றி இருக்கும் மக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளான பரங்கிமலை, பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல் உள்ளிட்ட இடங்களில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில், விமான நிலையத்தை சுற்றி வசிக்கும் மக்கள் தங்களுடைய பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் போகி பண்டிகையின்போது ஏற்பட்ட புகையால், 100க்கும் மேற்பட்ட விமானங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.