சுற்றுச்சூழல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் திண்டாட்டம் தொடங்கிவிட்டது. வெயிலும் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், 7 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் . இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.  

தற்போது தெற்கிலிருந்து காற்று வீசுகிறது. இந்தக் காற்று நிலப்பரப்புக்கு வராததே வெப்பநிலை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, சேலம், திருத்தணி, மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், கோவை, பாளையங்கோட்டை, தருமபுரி மற்றும் வேலூரில் வெப்பநிலை 101 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.