சுற்றுச்சூழல்

வறட்சியை சமாளிக்க செயற்கை மழை: நல்லதா? கெட்டதா?

வறட்சியை சமாளிக்க செயற்கை மழை: நல்லதா? கெட்டதா?

webteam

வறட்சியில் இருந்து மீள செயற்கை மழை குறித்த பேசப்பட்டு வரும் நிலையில், அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்

Cloud seeding எனப்படும் மேக விதைத்தல் மூலமாகத்தான் செயற்கை மழை உருவாக்கப்படுகிறது. சில்வர் அயோடைட், உப்பு, உலர் பனி அதாவது திடப்படுத்தப்பட்ட கார்பன் டையாக்சைட் ஆகியவை விமானம் மூலம் மேகங்களில் தூவப்படும். இதன்மூலம் செயற்கையாக குளிரூட்டப்படும் மேகங்கள் மழையைப் பொழியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா சோலாபூரில் செயற்கை மழை சோதித்துப் பார்க்கப்பட்டது. 2018ல் புது டெல்லியில் அதிகளவில் காற்றுமாசு ஏற்பட்டபோது, செயற்கை மழையை பொழிய வைக்க ஐ.ஐ.டி கான்பூர் குழு முயற்சித்தது. ஆனால், வேதிப் பொருட்களை தூவும் விமானத்திற்கு அனுமதி கிடைக்காததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. மேலும் சவுதி அரேபியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் செயற்கை மழைக்கு முயற்சித்துள்ளன. 

உலகிலேயே மிகப்பெரிய செயற்கை மழைத் திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது. சீனா ஸ்கை ரிவர் (China’s Sky river) எனப்படும் இத்திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் திபெத் தீபகற்பத்தில் மழை பொழிய வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இம்முயற்சியால் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் மழை குறைய வாய்ப்புள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். செயற்கை மழையால் இயற்கையான பருவநிலை பாதிப்புகுள்ளாகும் என்றும், வேதிப் பொருட்களின் கலப்பினால் பாலூட்டிகளும், தாவர இனங்களும் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து செயற்கை மழையை பொழிய வைத்தால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.