சுற்றுச்சூழல்

நிறங்கள் மாறும் தில்லை மரம்.. ஆர்வமுடன் பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள்

webteam

நாகை மாவட்டம் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசி முனீஸ்வரன் கோயில் அருகே சாலையின் இருபுறங்களிலும் தில்லை மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களின் இலைகள் பல்வேறு நிறங்களில் மாறி வருகிறது. முதலில் பச்சை நிறத்தில் காணப்படும் இலைகள், குறிப்பிட்ட நேரத்தில் சிவப்பு நிறத்திலும் , மஞ்சள் நிறத்திலும் மாறுகிறது. பின்னர் மீண்டும் பச்சை நிறத்திற்கே மாறி விடுகிறது.

மரத்திலிருந்து வெளிப்படும் விஷத் தன்மையுள்ள பால், உடலில் பட்டால் அரிப்பு ஏற்பட்டு புண்கள் ஏற்படும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் அழகை பார்த்து ரசிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதன் இலை, காய்களை  பறிக்க கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.