சுற்றுச்சூழல்

டைப் 2 நீரிழிவு நோயின் 7 அறிகுறிகள்

டைப் 2 நீரிழிவு நோயின் 7 அறிகுறிகள்

webteam

டைப் 2 நீரிழிவு நோயைக் கண்டறிய கண் மங்கலாக தெரிவது உள்ளிட்ட 7 அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் டைப் 2 நீரிழிவு நோயினால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும் இன்சுலின் சரியாக சுரக்காமல் போவதாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையில், ஒரு ஆய்வாளர்கள் குழு டைப் 2 நீரிழிவு நோய் குறித்து ஆய்வு செய்தனர். அதில் 7 முக்கியமான அறிகுறிகளை மேற்கோள் காட்டி, இவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் என்று கூறியுள்ளனர்.

7 அறிகுறிகள்:

* எப்போதும் தாகமாக உணர்வது
* அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவு நேரங்களில் அதிகமாக சிறுநீர் கழிப்பது
* மிகவும் சோர்வாக உணர்வது
* எடை குறைதல், குறிப்பாக தசை அளவு குறைவது
* பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது
* உடலில் ஏற்படும் காயங்கள் மெதுவாக குணமடைதல்
* கண் மங்கலாக தெரிவது

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் குறிப்பாக சாப்பிட்ட பிறகு அதிகமாக ஏற்படும். டைப் 2 நீரிழிவு நோயினால் இதயம் பாதிக்கப்படலாம், ரத்தக் குழாய்களில் அடைப்பு, கண்கள் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் சரியாக செயல்படால் போக வாய்ப்புள்ளது.