சுற்றுச்சூழல்

சென்னையில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

சென்னையில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

Sinekadhara

சென்னையில் இன்று காலைவரை 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளியன்று சென்னையில் குவியும் பட்டாசு குப்பைகளை 24 மணிநேரத்தில் அகற்றவேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று காலைவரை 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், சென்னையில் நாளைவரை பட்டாசு கழிவுகள் அகற்றப்படவுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

சென்னை மாநகராட்சியில் தினசரி கிட்டத்தட்ட 5,200 டன் குப்பை சேகரிக்கப்படும் நிலையில், தீபாவளியன்று குப்பையின் அளவு பல மடங்கு அதிகரிப்பதால் அவற்றை உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஆண்டு தீபாவளியின்போது 87 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.