கல்வி

யோகா, இயற்கை மருத்துவ முதுநிலை படிப்புகள்... விண்ணப்பங்கள் வரவேற்பு

யோகா, இயற்கை மருத்துவ முதுநிலை படிப்புகள்... விண்ணப்பங்கள் வரவேற்பு

webteam

சென்னை, அரும்பாக்கம், அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான முதுநிலை படிப்புக்கு (எம்டி) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுபற்றி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மாணவர் சேர்க்கை, அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



கல்வித்தகுதி

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பற்றிய முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது பிற பதிவுபெற்ற மருத்துவப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டம் அல்லது இயற்கை மருத்துவத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் தனது பெயரை தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ளவராக இருக்கவேண்டும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மருத்துவப் பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து உரிய தகுதிச் சான்று பெற்று, அதனை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி
இணையதளம் மூலம் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேரடியாக அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்பவேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 3000. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி, சென்னை 106 என்ற பெயரில் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர், அருந்ததியினர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. நூழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விணணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி
செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அரும்பாக்கம், சென்னை - 106

விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி தேதி: 5.10.2020 பிற்பகல் 5.30 மணிவரை

விவரங்களுக்கு: www.tnhealth.tn.gov.in