கல்வி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பதிலே இல்லாத கேள்வி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பதிலே இல்லாத கேள்வி

webteam

இரு ஆண்டுகளுக்கு முன் கலைக்கப்பட்ட இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார் என்ற கேள்வி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கேட்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வில், இந்தியத் திட்டக்குழு தலைவர் யார்? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டக்குழு கலைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மே‌லாகி விட்டநிலையில், இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பதிலே இல்லாத கேள்வி இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திட்டக்குழுவிற்கு பதிலாக மத்திய அரசால் நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாதது இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.