கல்வி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வித் துறை தகவல்

webteam

அக்டோபர் மாதத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முடிவை அரசு இன்னும் எடுக்க வில்லை என உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் முன்னர் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகைப்பதிவு அடிப்படையிலும் கணக்கிடப்படும் என்று அவர்களை அரசு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணபித்தவர்களையும் அவ்வாறு தேர்ச்சி  செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில் தமிழக அரசு சார்பில் தனித்தேர்வர்களை தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது என்றும் அவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று, அதற்கான முடிவுகள் அக்டோபரில்  வெளியிடப்படும் என கூறப்பட்டது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்த நீதிபதி எழுப்பிய கேள்விக்கு அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தனித்தேர்வர்கள் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.