கொரோனா பெருந்தொற்று நோய் உலக மக்களின் வாழ்வில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அன்றாட வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், வேலை, கல்வி என அனைத்திலுமே இந்த மாற்றம். குறிப்பாக கல்விக் கூடங்களில் மாணவர்கள் ஒன்றாக குழுமி கல்வி கற்பது கொரோனா பரவலுக்கு காரணமாகி விடும் என்ற அச்சத்தின் காரணத்தினால் இந்தியாவில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் கடந்த மார்ச் 2020 முதலே கதவடைத்துள்ளன.
அதனால் ஆன்லைன் துணையுடன் மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. இதிலும் நடைமுறை சிக்கல்கள் நிலவி வருகின்றன. அதில் பிரதானமானது மாணவர்கள் கல்வி பயில உதவும் டிஜிட்டல் சாதனமான ஸ்மார்ட்போன். அதனால் சில மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக உள்ளது.
அப்படிப்பட்ட மாணவர்களின் சிக்கல்களை களைய உதவும் ஆன்லைன் வகுப்புக்கு உகந்த குறைவான விலை கொண்ட பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் எவையெவை? என்பதை பார்ப்போம்.
>சாம்சங் கேலக்ஸி F12
சாம்சங் கேலக்ஸி F12 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அடங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் அசத்துகின்றன. 6.5 இன்ச் கொள்ளளவு LCD திரை, சாம்சங் எக்ஸினாஸ் 8nm பிராசஸர், ரியர் சைடில் நான்கு கேமரா, 6000 mAh பேட்டரி, டைப் சி USB போர்ட், 4ஜிபி RAM மற்றும் ஆண்ட்ராய்ட் 11 ஆப்பிரேட்டிங் சிஸ்டம், டால்பி ஆட்டம்ஸ் ஸ்பீக்கர் என பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 64ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட இந்த போனின் விலை 9,999 ரூபாயாகும். இதே போல சாம்சங் கேலக்ஸி F02s, M12 மாதிரியான போன்களும் பட்ஜெட் விலைக்குள் அடங்குகின்றன.
>ரியல்மி C2O
எட்டாயிரம் ரூபாய் விலைக்குள் அடங்குகிறது இந்த ரியல்மி C20 ஸ்மார்ட்போன். 2ஜிபி ரேம், மீடியாடெக் ஹீலியோ G35 கேமிங் சிப்செட், 5000mAh பேட்டரி, 8 மெகா பிக்ஸல் பிரைமரி கேமரா, 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோ USB போர்ட், ஆண்ட்ராய்ட் வி10 (Q) ஆப்பிரேட்டிங் சிஸ்டம் மாதிரியான சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
>மோட்டோ G10 பவர்
நீடித்த பேட்டரி திறன் கொண்ட போன்களில் இந்த மோட்டோ G10 பவர் போனும் ஒன்று. 6000 mAh பேட்டரி, குவால்கம் ஸ்னேப்டிரேகன் 460 சிப்செட், ரியர் சைடில் நான்கு கேமரா, 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் மெமரி, 4ஜி வோல்ட் நெட்வொர்க், டைப் சி சார்ஜிங் போர்ட், 6.5 இன்ச் LCD ஸ்க்ரீன் மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போனின் விலை 9,999 ரூபாயாகும். மோட்டோ நிறுவனத்தின் G30, E7 பவர் மாதிரியான போன்களும் பட்ஜெட் விலைக்குள் அடங்குகின்றன.
>லாவா Z2 மேக்ஸ்
மீடியாடெக் ஹீலியோ A20 புரோசஸர், ரியர் சைடில் இரண்டு கேமரா, 6000 mAh பேட்டரி, ஆண்ட்ராய்ட் வி10 (Q) ஆப்பிரேட்டிங் சிஸ்டம், 2ஜிபி ரேம், 7.0 இன்ச் LCD ஸ்க்ரீன், 32 ஜிபி இன்டர்னல் மெமரி, 4ஜி சப்போர்ட் டியூயல் சிம், 3.5 MM ஆடியோ ஜாக் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. இதன் விலையும் எட்டாயிரம் ரூபாய்க்குள் அடங்குகிறது.
>சியோமி போக்கோ M2
கார்னிங் கொரில்லா கிளாஸ் V3 பிராண்ட் ஸ்க்ரீன், ரியர் சைடில் நான்கு கேமரா, 6.53 இன்ச் LCD டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் மெமரி, மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட், 18வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி, டைப் சி சார்ஜிங் போர்ட் மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போனின் விலை 9,499 ரூபாயாகும்.
இதே போல இன்பினிக்ஸ், டெக்னோ, மைக்ரோமேக்ஸ், ஐ டெல், கூல்பேட், ஐ கால், டிசிஎல், கார்பன் மாதிரியான நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலைக்குள் கிடைக்கின்றன. இந்த போன்கள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களில் அறிமுகமான புதிய வகை மாடல் ஸ்மார்ட்போன்கள்.